
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டிக்கு முந்தைய ஆட்டம் நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கு முன் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது மலிங்கா கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கட்டாயம் விளையாட வேண்டும். அவருக்குப் பதிலாக மாற்று சிறந்த பினிஷர் வீரர்களை தயார் செய்ய இந்தக் காலம் உதவிகரமாக இருக்கும்.
தற்போது வரை அவர்தான் உலகின் சிறந்த பினிஷராக இருக்கிறார். அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
Be the first to comment