திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை கிரிகட் அணி விளையாடி வருகின்றது. T20 போட்டியின் பின்பு சமீபகாலமாக இலங்கையை பாக்கிஸ்தானிற்கு விளையாட அழைக்கின்றது்.
இது தொடர்காக பல விமர்சனங்கள் வருகின்றது. இப்போது இலங்கை பாக்கிஸ்தான் பயணத்தை ரத்து செய்யாவிட்டால். I.P.L தொடரில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால் தான் இலங்கை அணி பாக்கிஸ்தான் வர மறுக்கின்றது என்று பாக்கிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கருத்தை முழுமையாக மறுக்கின்றார் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ.
கடந்த 2009ம் ஆண்டு பாக்கிஸ்தானுக்கு சுற்றுத்பயணத்தை மேற்கொண்ட போது இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடந்து 7 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினரே அதுவே முக்கிய காரணமாகும்.
இலங்கை அணியின் 10 வீரர்கள் (லசித் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்க லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணாரத்ன.) ஆகியோர் பாக்கிஸ்தானிற்கு செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணி விளையாடுவதற்கு பாக்கிஸ்தானிற்கு விஜயம் செய்வார்கள். என பாக்கிஸ்தான் தலைவர் சப்பிராஸ் அகமட் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி பாக்கிஸ்தான் சென்று விளையாடுமா?
என்பது கேள்விகுறியே?
Be the first to comment