
T20, 3 டெஸ்ட், 3 நாள் போட்டிகள் 15ந்திகதி முதல் நடைபெறவிருந்தது.
மழை காரணமாக நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது போட்டி
கைவிடப்பட்டது.
இந் நிலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் மொஹாலியில் ஆரம்பமான
இரண்டாவது T20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய
அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார்.
அதன் படி தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149
ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 19 ஓவர்களில் 3
விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, தென்னாப்பிரிக்கா அணியை தோல்வி
அடைய செய்தது.
பந்து வீச்சில் பெல்வாயோ, ஷம்சி மற்றும் போர்டுமின் ஆகியோர் தலா
ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.
தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!
Be the first to comment